/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல் பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2025 04:17 AM
புதுச்சேரி: கவர்னர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
பா.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்று, இதுவரை 2,444 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதேபோன்று மீதமுள்ள காலிபணியிடங்களை நிரப்பவும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.எப்.டி,. திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.534 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள திட்டத்தில் எனது காலாப்பட்டு தொகுதியை பரிசீலனை செய்தமைக்கு நன்றி. அப்பணிகளை நடப்பு ஆண்டிலேயே செய்து தர வேண்டும். மாநிலம் முழுதும் ஏரி, குளங்களை சீரமைக்க ஜல் சக்தி திட்டத்தின் கீழ் ரூ.750 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எனது தொகுதிக்குட்பட்ட வெள்ளவாரி ஓடை போன்ற நீர்நிலைகளை சேர்க்க வேண்டும்.
புதிய பஸ்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றேன். ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்கனவே இயங்கி வந்த பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை. புதிதாக வாங்கும் பஸ்களில் எனது தொகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.