/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேக்கம் நாஜிம் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேக்கம் நாஜிம் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு
கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேக்கம் நாஜிம் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு
கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேக்கம் நாஜிம் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு
கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேக்கம் நாஜிம் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : மார் 14, 2025 04:17 AM
புதுச்சேரி: கவர்னர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நாஜிம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரியின் 1963 சட்டத்தின்படி கவர்னருக்கு தான் அதிகாரம். இது இலைமறை காயாக இருந்தது. ஆனால் இது குபேர் ஆட்சி, மரைக்காயர் ஆட்சி , ஜானகிராமன் ஆட்சி, என்.ஆர்., ஆட்சி என்று தான் சொல்வார்கள். இதை யாரும் கவர்னர் ஆட்சி என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
ஆனால், இன்றைக்கு நமக்கு அதிகாரம் ஒன்றும் இல்லை என்ற நிலை வந்துள்ளது. உதாரணமாக அரசு வேலை வாய்ப்பில் 40 வயது வரை தளர்வு என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்கள். பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும் இது சொல்லப்பட்டது. ஆனால். 2 ஆண்டு வயது தளர்விற்கே மூச்சு திணறி கோப்பு திரும்பி வருகிறது.
ஒரே விவகாரத்தில் கவர்னர் ஒரு முடிவு. முதல்வர் ஒரு முடிவு. தலைமைச் செயலர் ஒரு முடிவு எடுத்தால் மாநிலம் எப்படி வளர்ச்சி அடையும். கவர்னர், முதல்வர் உட்கார்ந்து பேசினால் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
புதுச்சேரி என்றாலே உச்ச நீதிமன்றம் கொல்லைப்புற நியமனம் என்கிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக யாரையும் நியமிப்பதில்லை. நியமன விதிகளின் அடிப்படையில் தான் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது எப்படி கொல்லைப்புறம் நியமானகும். நீதிமன்றங்களில் நமது அரசு வழக்கறிஞர்கள் சரியாக வாதங்களை முன்வைப்பதில்லை.
கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேங்கியுள்ளன. கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லவில்லை. அந்த கோப்பு கவர்னர் மாளிகையில் தேங்கியுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நாம் எடுக்கிறோம். படித்ததற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று வந்து பணியில் சேருகின்றனர்.
புதுச்சேரி அரசும் ஒரு முடிவை எடுத்து ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் இடங்களை நிரப்புகிறது. ஆனால் மத்திய தேர்வாணையம் மூலம் தான் டாக்டர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்கிறார்கள்.
அரசு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் போடுவதன் நோக்கம் என்ன. நல்லது செய்ய வேண்டும் என்பது. ஆனால் நடப்பது வேறாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.