/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டூ வீலர் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என விசாரணை டூ வீலர் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என விசாரணை
டூ வீலர் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என விசாரணை
டூ வீலர் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என விசாரணை
டூ வீலர் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ விபத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என விசாரணை
ADDED : ஜூலை 21, 2024 05:58 AM

புதுச்சேரி: மூலக்குளம் தக்ககுட்டை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் டூவீலர் ஒர்க் ஷாப் எரிந்து நாசமானது. முன் விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை, மூலக்குளம் ஜே.ஜே., நகர் அருகே டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று மதியம் 3:00 மணிக்கு இவரது ஒர்க் ஷாப் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.
அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீ சுவாலைகள் சாலை வரை வீசியதால், வாகனங்கள் கடந்து செல்லாமல் நிறுத்தப்பட்டது. கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்தில் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 8 பைக்குகள் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பைக் ஒர்க் ஷாப் உரிமையாளர் நடராஜனின் டாடா ஏஸ் வாகனத்தை எடுத்து சென்ற கீழ் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ரகு, 2 நாட்கள் கடந்தும் வாகனத்தை ஒப்படைக்கவில்லை. போலீசார் வாகனத்தை மீட்டு, ரகுவை எச்சரித்துஅனுப்பி வைத்தனர். இந்நிலையில், நடராஜின் ஒர்க் ஷாப் தீப்பற்றி எரிவதற்கு முன்னதாக 3 பேர் ஒர்க் ஷாப் அருகே நின்றிருந்து புறப்பட்டு செல்வது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால், பைக் ஒர்க் ஷாப் பெட்ரோல் குண்டு வீசி தீ வைக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.