/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மின்னிதழ் துவக்க விழா புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மின்னிதழ் துவக்க விழா
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மின்னிதழ் துவக்க விழா
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மின்னிதழ் துவக்க விழா
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மின்னிதழ் துவக்க விழா
ADDED : ஜூலை 21, 2024 05:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் தமிழ்ச்சங்க மின்னிதழ் துவக்க விழா நடந்தது.
சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். முன்னதாக சங்க செயலாளர் சீனுமோகன்தாஸ் வரவேற்றார். கலை பண்பாட்டு துறை இயக் குநர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சங்க மின்னிதழை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, துணை செயலர் தினகரன், உசேன், ராசா, சிவேந்திரன், சுரேஷ்குமார், ஆனந்தராசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் அருள்செல்வம் நன்றி கூறினார்.