ADDED : ஜூலை 21, 2024 05:57 AM

நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில், காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் ஏம்பலம் கிராமத்தில் நடந்தது.
கால்நடை மருத்துவர் செல்வமுத்து வரவேற்றார். வேளாண் அலுவலர் தினகரன் காளான் வளர்ப்பு முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்து விளக்கினார். விவசாயி காசிநாதன் காளான் வளர்ப்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், செய்முறை, பாதுகாப்பது அறுவடை செய்து விற்பனை செய்வது குறித்து பேசினார்.
நத்தமேடு, ஏம்பலம், புதுக்குப்பம் ஆகிய பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் அரை கிலோ காளான் இலவசமாக வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் கிருஷ்ணன், குமணன், தம்புசாமி ஆகியோர் செய்திருந்தனர்.