/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியர் பதவிக்கு நேர்காணல் அரசு மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியர் பதவிக்கு நேர்காணல்
அரசு மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியர் பதவிக்கு நேர்காணல்
அரசு மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியர் பதவிக்கு நேர்காணல்
அரசு மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியர் பதவிக்கு நேர்காணல்
ADDED : ஜூன் 17, 2024 06:52 AM
புதுச்சேரி: கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 84 பேராசிரியர் பதவிகளுக்கு நான்கு நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உதயசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆகிய 84 பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் இப்பதவிகளை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்க்காணல் வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 8:30 மணிக்கு அனாடமி, 9:00 மணிக்கு பிசியாலஜி, 10:00 மணிக்கு பயோ கெமிஸ்ட்டி, 11:00 மணிக்கு புள்ளியியல் நிபுணர் ஆகிய பதவி களுக்கான நேர்க்காணல் நடக்கிறது. 25ம் தேதி காலை 8.30 மணிக்கு மருந்தியல், 9:30 மணிக்கு மைக்ரோ பயாலஜி, 10:00 மணிக்கு நோயியல் ஆகிய பதவிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
26ம் தேதி காலை 8:30 மணிக்கு பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், கண் மருத்துவம், மன நோய், மயக்க மருந்தியல் ஆகிய பதவிகளுக்கும், 27ம் தேதி காலை 8:30 மணிக்கு பொது மருத்துவம், காலை 9:00 மணிக்கு குழந்தை மருத்துவம், ஈ.என்.டி. சுவாச மருத்துவம், மகப்பேறியியல், ரேடியோ டயக்னசிஸ் ஆகிய பதவிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
நேர்காணலுக்கு வருவோர் அனைத்து அசல் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யவில்லை என்பது பிறகு கண்டறியட் பட்டால், பணி நியமனம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.