/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ.6 கோடியில் 10 தீயணைப்பு வாகனங்கள் புதுச்சேரி தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ.6 கோடியில் 10 தீயணைப்பு வாகனங்கள்
புதுச்சேரி தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ.6 கோடியில் 10 தீயணைப்பு வாகனங்கள்
புதுச்சேரி தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ.6 கோடியில் 10 தீயணைப்பு வாகனங்கள்
புதுச்சேரி தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ.6 கோடியில் 10 தீயணைப்பு வாகனங்கள்
ADDED : ஜூன் 17, 2024 06:51 AM

புதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்பு நிலையங்களுக்கு அதிநவீன 10 தீயணைப்பு வாகனங்கள் 6 கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அவசர காலங்களில் மக்களுக்கு விரைந்து உதவி செய்யும் வகையில், டி.நகர், வில்லியனுார், பாகூர், மடுகரை, திருக்கனுார், திருபுவனை, காலாப்பட்டு, சேதராப்பட்டு, காரைக்கால், காரைக்கால் சுரகுடி, மாஹி, ஏனாம் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தீயணைப்பு நிலையங்களில் 15 ஆண்டுகள் கடந்த வாகனங்கள் அப்புறப்படுத்திவிட்டு புதிய வாகனங்கள் வாங்க, புதுச்சேரி அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், 6 கோடி ரூபாய் செலவில் 10 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் இருந்து வாங்கப்பட்டுள்ள இந்த தீயணைப்பு வாகனங்கள் கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகன பதிவெண் செய்யப்பட்டதும், இவை விரைவில் அந்தந்த தீயணைப்பு நிலையங்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.