/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம்; அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம்; அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி
ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம்; அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி
ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம்; அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி
ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம்; அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி

போக்குவரத்து மாற்றம்
கடலுார் மார்க்கமாக, செல்லும் பஸ்கள்,புதுச்சேரி - கடலுார் சாலையில், இடதுபுறம் திரும்பி சென்றன. முதலியார்பேட்டை ரயில்வே மூடப்பட்டிருக்கும் சமயத்தில், கடலுார் மார்க்க பஸ்கள்,கடலுார் சாலையில் வலதுபுறம் திரும்பி, மறைமலை அடிகள் சாலையில் இடதுபுறம் திரும்பி, இந்திரா சதுக்கம சென்று, 100 அடி சாலை வழியாக சென்றன.
பயணிகள் தவிப்பு
சுற்றுலா நகரம் என்பதால், வார இறுதி நாட்களில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான, சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். ஆனால் பஸ் நிலையம், ஏ.எப்.டி மைதானத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, புதிய பேருந்து நிலையத்தில் தமிழில், மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த பஸ் நிலைய சாலையானது, மண் சாலையாக உள்ளது. அதனால் பஸ்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. மழை பெய்தால், தண்ணீர் தேங்குவதுடன், சாலை சேறும் சகதியாக மாற வாய்ப்புள்ளது. அதனால் இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பயணிகள் சிரமமின்றி, பஸ் நிலையத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.