ADDED : ஜூன் 24, 2024 05:28 AM

புதுச்சேரி, : ஆரோவில் சர்வதேச நகரத்தில், யோகா மாரத்தான் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பல்வேறு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஆரோவில் சர்வதேச நகரில், ஆரோவில் பவுண்டேஷன் சார்பில், 'யோகா மராத்தான்' கடந்த ஒரு வாரமாக நடந்தது. நிகழ்ச்சியில், ஆரோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு ஆசனங்கள், முத்திரைகள், பிராணயாமா மூச்சு பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினமான, கடந்த 21ம் தேதி, மாத்ரி மந்திரி அருகில், ஆம்பி தியேட்டரில் ஆரோவில் வாசிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர், பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆரோவில் பவுண்டேஷன் இயக்குனர் சொர்ணாம்பிகா, 'பாரத தேசத்தின் நன்கொடையான யோகாசனத்தை உலக மக்களின் நன்மைக்காக அனைவருக்கும் எடுத்துச் செல்ல நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்ய வேண்டும்' என்றார். நிகழ்ச்சி ஆரோவில் 'மோகனம்' குழுவின் 'சவுண்ட் பாத்'துடன் நிறைவு பெற்றது.