ADDED : ஜூன் 05, 2024 03:08 AM
புதுச்சேரி: சாலையோரத்தில் இறந்து கிடந்த முதியவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தியாகு முதலியார் வீதி பெரிய மார்கெட் அருகே 65 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.
இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.