/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மது கடைகள் மூடல் வெறிச்சோடிய புதுச்சேரி மது கடைகள் மூடல் வெறிச்சோடிய புதுச்சேரி
மது கடைகள் மூடல் வெறிச்சோடிய புதுச்சேரி
மது கடைகள் மூடல் வெறிச்சோடிய புதுச்சேரி
மது கடைகள் மூடல் வெறிச்சோடிய புதுச்சேரி
ADDED : ஜூன் 05, 2024 03:08 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
அதை அடுத்து, புதுச்சேரியில் உள்ள 400 மது பார்கள் மற்றும் சாராய கடைகளை மூட வேண்டும் என கலால்துறை ஏற்கனவே உத்தர பிறப்பித்தது.
அதன்படி, நேற்று புதுச்சேரியில் உள்ள அனைத்து மது பார்கள், சாராயக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
மேலும், முக்கிய இடங் களில் உள்ள வணிக கடைகள், ஓட்டல்கள் பெரும்பாலும், மூடப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கை டி.வி., மூலம் பார்ப்பதற்கு மக்கள் வீட்டிலேயே இருந்தால், நேற்று வியாபார கடைகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது.
முக்கிய சாலைகள், பஸ் நிலையம், பூங்காக்கள் போன்ற இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடி காணப்பட்டது.