/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரைனி ப்ளூம்ஸ் மாடர்ன் பள்ளி புதிய பள்ளி திறப்பு விழா பிரைனி ப்ளூம்ஸ் மாடர்ன் பள்ளி புதிய பள்ளி திறப்பு விழா
பிரைனி ப்ளூம்ஸ் மாடர்ன் பள்ளி புதிய பள்ளி திறப்பு விழா
பிரைனி ப்ளூம்ஸ் மாடர்ன் பள்ளி புதிய பள்ளி திறப்பு விழா
பிரைனி ப்ளூம்ஸ் மாடர்ன் பள்ளி புதிய பள்ளி திறப்பு விழா
ADDED : ஜூன் 05, 2024 03:09 AM

புதுச்சேரி: ஸ்ரீ அரவிந்த் கல்வி குழும புதிய கல்வி நிறுவனம் பிரைனி ப்ளும்ஸ் மாடர்ன் பள்ளியின் திறப்பு விழா, கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ செல்வம் பங்கேற்றனர்.
இதில் கல்விக்குழும அருண் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் திவ்யா முன்னிலை வகித்தார். அரவிந்த் கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவர் நாராயணசாமி மற்றும் காந்திமதி விருந்தினர்களை கவுரவித்தனர்.
இந்த விழாவில் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், கட்டுரை, திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. மேலும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக, கல்விக்குழும தலைமை செயல் அலுவலர் சத்தியவேலு நன்றி கூறினார்.
இதில் வக்கீல் வினோபா, சுப்ரீம் ரியல் ஏஜென்சி செந்தில் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.