/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணி துவக்கம் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணி துவக்கம்
விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணி துவக்கம்
விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணி துவக்கம்
விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 04, 2024 04:55 AM

புதுச்சேரி, : உழவர்கரை நகராட்சி மூலம் குப்பைகளை தரம் பிரிந்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணி துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி சாலைகள், காலி மனைகள் மற்றும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்குமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பூங்கா, ஏரி, குளங்கள், திடல்கள் ஆகிய இடங்களில் சிறப்பு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலைகளில் குப்பைகளை போட வேண்டாம் என தினமும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்துவதுடன், மீறுபவர்களை கண்டறிந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது, நகராட்சி பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணி காப்பது மற்றும் அதன் அவசியங்களை விளக்கும் வகையில் விழிப்புணர்வு சுவரோவியங்கள் வரையும் பணி துவங்கப்பட்டு உள்ளது.
நகராட்சியின் முக்கிய சாலை பகுதி சுவர்களில் தற்போது விழிப்புணர்வு சுவரொவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், சுகாதாரத் துறையுடன் இணைந்து புகை மற்றும் கொசு மருந்து நகராட்சி முழுவதும் தெளிக்கப்படுகிறது.
நகராட்சி சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப் பட்டு, முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் நகராட்சியுடன் ஒத்துழைப்பு தந்து குப்பை இல்லா நகராட்சியாக மாற்ற உறுதி ஏற்க வேண்டுமென ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.