/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நர்சிங் படிப்புக்கு நுழைவு தேர்வு: வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் நர்சிங் படிப்புக்கு நுழைவு தேர்வு: வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
நர்சிங் படிப்புக்கு நுழைவு தேர்வு: வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
நர்சிங் படிப்புக்கு நுழைவு தேர்வு: வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
நர்சிங் படிப்புக்கு நுழைவு தேர்வு: வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 04, 2024 04:56 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நர்சிங் படிப்புக்கு நுழைவு தேர்வு அடுத்தமாதம் 14ம் தேதி நடக்கின்றது.வரும் 10 ம்தேதி முதல் இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரிகளில் கடந்த காலங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.
இந்தாண்டு நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவித்து இருந்தது.
அதன்படி நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வரும் 10ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவு தேர்வு அடுத்த மாதம் 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விகள் எப்படி:
நர்சிங் படிப்புக்கான நுழைவு தேர்வு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இருக்கும். இயற்பியல் 20 மதிப்பெண், வேதியியல் 20, உயிரியல் 20,ஆங்கிலம் 20, நர்சிங் ஆப்டிடியூட் 20 என மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
பொது, இடபுள்யூ,ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி தேர்வர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதுமானது.விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாகவே செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 17 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.திருமணமாகி இருந்தாலும் நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என சுகாதார துறையின் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.