/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூ.புதுக்குப்பம் கிராமத்தில் வெறி நாய் கடித்து ஆறு சிறுவர்கள் உள்பட 10 பேர் பாதிப்பு மூ.புதுக்குப்பம் கிராமத்தில் வெறி நாய் கடித்து ஆறு சிறுவர்கள் உள்பட 10 பேர் பாதிப்பு
மூ.புதுக்குப்பம் கிராமத்தில் வெறி நாய் கடித்து ஆறு சிறுவர்கள் உள்பட 10 பேர் பாதிப்பு
மூ.புதுக்குப்பம் கிராமத்தில் வெறி நாய் கடித்து ஆறு சிறுவர்கள் உள்பட 10 பேர் பாதிப்பு
மூ.புதுக்குப்பம் கிராமத்தில் வெறி நாய் கடித்து ஆறு சிறுவர்கள் உள்பட 10 பேர் பாதிப்பு
ADDED : ஜூன் 04, 2024 04:54 AM
பாகூர், : மூ.புதுக்குப்பம் கிராமத்தில் சுற்றித்தரியும் வெறி நாய் கடித்து, 6 சிறுவர்கள் உள்பட 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுச்சேரியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வெறி பிடித்த நிலையில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகூர் தொகுதிக்குட்பட்ட மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுற்றித்திரியும் வெறி பிடித்த தெரு நாய் ஒன்று நேற்று காலை வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி பிரித்திகாவை கடித்து குதறி உள்ளது.
இதில், அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி ராஜிவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நல்லவாடு மற்றும் பனித்திட்டு கிராமத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளும் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மூ.புதுக்குப்பம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களில், 6 குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் வெறி நாயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெறி நாயை கிராம மக்கள் அடித்து விரட்டினால், அவர்களையும் விரட்டி விரட்டி கடிக்க பாய்ந்து வருகிறது. குறிப்பாக அந்த நாய் குழந்தைகளையே குறி வைத்து கடித்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
வெறி நாய் அச்சத்தால் மூ.புதுக்குப்பம் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மூ.புதுக்குப்பம் கிராமத்தில் சுற்றித்திரியும் வெறி நாயை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.