/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எரியாத ஹைமாஸ் விளக்கு: பொதுமக்கள் அவதி எரியாத ஹைமாஸ் விளக்கு: பொதுமக்கள் அவதி
எரியாத ஹைமாஸ் விளக்கு: பொதுமக்கள் அவதி
எரியாத ஹைமாஸ் விளக்கு: பொதுமக்கள் அவதி
எரியாத ஹைமாஸ் விளக்கு: பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 04, 2024 04:52 AM
நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் காலனி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியாததால் அப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபம் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ளது. அதனால் அங்கு அரசு சார்பில், ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் வெளிச்சமாக காணப்பட்டதால், கோவில் வளாக பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வீட்டு வேலை பாடங்கள், குருப் ஸ்டடி படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த பத்து மாதமாக கோவில் வளாகத்தில் ஹைமாஸ் விளக்கு எரியவில்லை. இதனால் கோவில் வளாகம் முழுவதும் இருள் சூழந்து காணப்டுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையில் சில விஷம கிருமிகள் மது அருந்துகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.ஆகையால், கல்மண்டபம் காலனி பகுதியில் எரியமால் உள்ள ஹைமாஸ் விளக்கினை சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.