/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... கொடியுடன் நிற்கும் பெண் யார்? அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... கொடியுடன் நிற்கும் பெண் யார்?
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... கொடியுடன் நிற்கும் பெண் யார்?
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... கொடியுடன் நிற்கும் பெண் யார்?
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... கொடியுடன் நிற்கும் பெண் யார்?
ADDED : ஜூன் 16, 2024 05:43 AM

புதுச்சேரி கடற்கரை அருகே அமைந்துள்ள கப்ஸ் தேவாலயத்தின் அழகிலும், அமைதியிலும் மனத்தை பறிகொடுக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இங்கு ஞாயிறுதோறும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பிரார்த்தனையை கேட்பது புதுமையான அனுபவமாகும்.
இந்த தேவலாயத்தின் எதிரே, வெற்றி பெருமிதத்துடன் நிமிர்ந்த நன்னடையில் கையில் கொடியை பிடித்தப்படி கனல் கக்க பளிங்கு சிலையாக நிற்கும் வீரப்பெண்ணின் பெயர் ழாந்தார்க்.
பிரான்ஸ் நாட்டின் தோம்ரெமி கிராமத்தில் 1412ல் பிறந்த ழாந்தார்க், ஆங்கிலேயர் வசம் சிக்கி இருந்த ஓர்லெயான்ஸ் கோட்டை பிடிக்க சிறு படையுடன் சென்று எதிரிகளை சிதறி ஓட செய்தார். அதன் விளைவாக, ஓர்லெயான்ஸ் நகரம் மீண்டும் பிரான்ஸ் வசம் வந்தது. ஆனால், ஆங்கிலேயர் மீண்டும் பாரீஸ் நகரை கைப்பற்றும் முயற்சியில் கொம்பாஞ்ஞி நகரில் தாக்குதல் நாலாபுறங்களிலும் இருந்து தொடுத்தனர். இதில் ழாந்தார்க் பிடிபட்டாள்.
கடந்த 1431ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி ரூயென் நகரில் நடு வீதியில் மரத்தில் கட்டி வைத்து, ழாந்தார்க் உயிரோடு கொளுத்தப்பட்டாள். இது. பாரீசில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மன்னர் சார்லசுக்கு, அப்பெண்ணின் தேசபக்தி தாமதமாக புரிய வர, மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
போப்பாண்டவர் மூன்றாம் கேலிக்டஸ் விசாரணை செய்து, ழாந்தார்க் மீதான தண்டனையை ரத்து செய்தார். 500 ஆண்டுகளுக்கு பின், 1920 மே மாதம் 16ம் தேதி போப்பாண்டவர் பதினைந்தாம் பெனடிக்ட் புனிதர் பட்டம் வழங்கினார். அந்த வீரப்பெண்ணின் தியாகத்தை போற்றும் வகையில், புதுச்சேரி கப்ஸ் தேவாலயம், கடந்த 1920ம் ஆண்டு புனரமைக்கப்பட்டபோது, ழாந்தார்க் பளிங்கு சிலையை பிரான்சுவா காதர்த் என்ற செல்வந்தர் நிறுவினார்.
கடந்த 1923ம் ஆண்டு பிப்வரி மாதம் 20ம் தேதி கவர்னர் ழெர்பினி, மேயர் கெப்ளே முன்னிலையில் பேராயர் மோரேன், வீரப்பெண்மணி சிலையை அர்ச்சித்து ழாந்தார்க் சதுக்கம் என்று பெயரிட்டு காட்சியகப்படுத்தினார்.