Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 16, 2024 05:42 AM


Google News
புதுச்சேரி: மாணவர்களுக்கான, இலவச மனித வள மேம்பாட்டு மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி முகாமை நடத்த விரும்பும் அரசுப்பள்ளி மற்றும் கல்லுாரிகள் பதிவு செய்து கொள்ள லாம் என, இளைஞர் அமைதி மையத்தின் நிறுவனர் அரிமதி இளம்பரிதி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

மனித வளம் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்தப்பட உள்ளது.

நேர்மறை எண்ணங்கள், எதிர்மறைச் சிந்தனைகளைக் களையும் வழிமுறைகள், பேச்சாற்றல் கலை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளைத் தன்னம்பிக்கையோடு எழுதும் திறன் மேம்பாடு, கூடுதல் திறன் வளர்ப்பு, வாசிப்புப் பழக்கம், மது மற்றும் போதைப் பொருள்களால் விளையும் ஆபத்துக்கள் மற்றும் தலைவர்களுக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமை நடத்த விரும்பும், அரசு பள்ளி, கல்லுாரி தலைமையாசிரியர்களும், முதல்வர்களும், இளைஞர் அமைதி மையம், 72 முதல் குறுக்குத் தெரு, ஆனந்தரங்கப் பிள்ளை நகர், புதுச்சேரி 605 008 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us