ADDED : மார் 14, 2025 04:20 AM
புதுச்சேரி: புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்து, அவரிடமிருந்து பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாகி அருகே உள்ள செருகல்லை பகுதியில் புகையிலை பொருட்களான குட்காவை வைத்து விற்பனை செய்வதாக மாகி போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை அடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில், சந்தேகமான முறையில் பைக்கில் நின்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், புகையிலை பொருட்கள், குட்கா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து, அவரிடமிருந்து குட்கா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.