கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்கம்
கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்கம்
கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்கம்
ADDED : மார் 14, 2025 04:20 AM

புதுச்சேரி: பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில், தமிழ்த்துறையின் கணித் தமிழ்பேரவை, தர உறுதியளிப்புக்குழு சார்பில் இரண்டு நாள் கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்க விழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். கணித் தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய பிரெஞ்சுத் துறை தலைவர் வெங்கட சுப்பராய நாயகர் கலந்து கொண்டு, மொழி பெயர்ப்பில் கணினி, இணையத்தின் பங்களிப்பு குறித்து பேசினார்.
கல்லுாரி தர உறுதியளிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வாழ்த்தி பேசினார். தமிழ்த்துறை தலைவர் சேதுபதி நோக்கவுரை ஆற்றினார். துணை பேராசிரியர் வஜ்ரவேலு நன்றி கூறினார். மாணவி அழகரசி தொகுத்து வழங்கினார்.
முனைவர் புஷ்பலதா, முனைவர் பட்டம்மாள், சிவக்குமார், சந்திரகலா சிறப்புரை வழங்கினர். திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.