/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம் சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம்
சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம்
சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம்
சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம்
ADDED : மார் 14, 2025 04:21 AM
புதுச்சேரி: சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற அரசு வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11:00 மணி அளவில் புதுச்சேரி பல்கலைக் கழக துணை பதிவாளரின் அரசு வாகனம், தபால் பணிக்காக சட்டசபைக்கு வந்தது.
சட்டசபையின் நுழைவு வாயில் உள்ளே சென்ற வாகனம், திடீரென பழுதாகி வழியிலேயே நின்றது. இதனால், சட்டசபைக்கு வந்து செல்லும் மற்ற வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சட்டசபை செயலர் தயாளன் அறிவுறுத்தலின் பேரில், தனியார் மினி கிரைன் மூலம் பழுதாகி நின்ற வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.