ADDED : ஜூலை 05, 2024 06:30 AM
புதுச்சேரி: குளியலறையில் வழுக்கி விழுந்த அரசு ஊழியர் இறந்தார்.
வில்லியனுார் அடுத்த அரசூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 42. பொதுப்பணித் துறை ஊழியர். இருத நோயால் பாதிக்கப்பட்ட ராஜா சிகிச்சை எடுத்து வந்தார்.
நேற்று மாலை 4:30 மணிக்கு குளியலறைக்கு சென்ற ராஜா, திடீரென வழுக்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ராஜம் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.