/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆம்புலன்சை செக்கியூரிட்டி ஓட்டும் வீடியோ வைரல் ஆம்புலன்சை செக்கியூரிட்டி ஓட்டும் வீடியோ வைரல்
ஆம்புலன்சை செக்கியூரிட்டி ஓட்டும் வீடியோ வைரல்
ஆம்புலன்சை செக்கியூரிட்டி ஓட்டும் வீடியோ வைரல்
ஆம்புலன்சை செக்கியூரிட்டி ஓட்டும் வீடியோ வைரல்
ADDED : ஜூலை 05, 2024 06:29 AM
புதுச்சேரி : ஜிப்மர் ஆம்புலன்சை செக்கியூரிட்டி ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துமனைக்கு புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவனையில் இயங்கும் ஆம்புலன்ஸ்களை இயக்க ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் நியமிக்கப்பட்டு இயக்கி வந்தனர்.
இதனிடையே ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை, ஜிப்மர் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜிப்மரில் உள்ள ஆம்புலன்ஸ்கள் அங்கு பணியாற்றி வரும் செக்கியூரிட்டி கொண்டு இயங்கி வருவதாக தெரிகிறது.
இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆபத்தான நேரங்களில் நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்களை செக்கியூரிட்டியை கொண்டு இயக்கும் ஜிப்மர் நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.