/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம்': பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ரங்கசாமி 'பளீச்' 'தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம்': பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ரங்கசாமி 'பளீச்'
'தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம்': பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ரங்கசாமி 'பளீச்'
'தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம்': பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ரங்கசாமி 'பளீச்'
'தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம்': பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ரங்கசாமி 'பளீச்'
ADDED : ஜூலை 05, 2024 06:30 AM
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
டில்லியில் முகாமிட்டுள்ள பா.ஜ., மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தனர்.
அப்போது அவரிடம், புதுச்சேரி அமைச்சர்களை மாற்ற வேண்டும் என, நேற்று முன்தினம் கோரிக்கை வைத்தனர். மேலும், அவரிடம், பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி அளிக்கவும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முறையிட, அங்கு தொடர்ந்து முகாமிட்டு காத்திருக்கின்றனர். இந்நிலையில், அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், டில்லியில், தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த போது, முதல்வர் ரங்கசாமி மீது சரமாரியாக புகார்கள் தெரிவித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து முதல்வர் ரங்கசாமியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அவர்களின், தலைமையை சந்திக்கின்றனர். அது அவர்களது விருப்பம். புதுச்சேரியில், அனைத்து மக்கள் நல திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தை சிறப்பு மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம்' என்றார்.
வாரிய தலைவர்கள் பதவிகளை நிரப்புவது குறித்து, எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் எதுவும்அளிக்காமல் சென்று விட்டார்.