போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 29, 2024 06:19 AM

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கணபதி முன்னிலை வகித்தார். திருக்கனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல், எவ்வாறு நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர் பிரியா போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து, பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். ஆசிரியர்கள், மாணவர்கள், திருக்கனுார் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.