ADDED : ஜூன் 29, 2024 06:19 AM

நெட்டப்பாக்கம்: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு கறவை மாடு மேம்பாடு மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியகம் வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார்.
கால்நடை மருத்துவர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கால்நடைத்துறை இணை இயக்குனர் குமரவேல் கலந்து கொண்டு, கால்நடை விவசாயிகளுக்கு பால் உற்பத்தியை எவ்வாறு பெருக்குவது என்பது குறித்து விளக்கம் அளித்தார். மருத்துவர் தாமரைச்செல்வி கால் நடை துறை மூலம் கால்நடை விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து பேசினார்.
முகாமில், கால்நடை மற்றும் ஆத்மா திட்ட குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை வேளாண் அலுவலக ஊழியர்கள் குமணன், தம்பு சாமி செய்திருந்தனர்.