/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலியான ஆப் மூலம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை போலியான ஆப் மூலம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
போலியான ஆப் மூலம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
போலியான ஆப் மூலம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
போலியான ஆப் மூலம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 05:19 AM
புதுச்சேரி : வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில்,
புதுச்சேரியில் தொடந்து, மர்ம நபர்கள், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ரா கிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மர்ம கும்பல் போலியான ஆப்பை உருவாக்கி அதன் மூலம் பணம் மோசடி செய்து வருகின்றனர்.
மேலும், ேஷர் மார்கெட், டிரேடிங் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பேசி, ஒரு குருப்பை உருவாக்கி, அதன் மூலம் மக்களிடம் பேசி வருகின்றனர். அதை நம்பி, மக்கள் பல லட்சம் முதலீடு செய்து ஏமாந்து வருகின்றனர்.
மேலும், மர்ம கும்பல், பொது மக்களிடம் மொபைல் போனில் பேசி, 5 ஆயிரம் முதலீடு செய்யும் நபர்களுக்கு 10 ஆயிரம் தருகின்றனர். அந்த ஆசையில், அவர்கள், மேலும், பல லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்து வருகின்றனர். போலியான ஆப்பை பயன்படுத்தி, அதன் மூலம் முதலீடு செய்ய வைத்து, மர்ம நபர்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
எனவே ேஷர் மாக்கெட்டில் முதலீடு செய்பவர்கள் சரியான நிறுவன ஆப்பை விசாரித்து, தேர்வு செய்ய வேண்டும். தற்போது 99 சதவீதம் போலியான ேஷர் மார்கெட் மூலம் மோசடி நடந்து வருகிறது.
சந்தேகப்படும்படியான நபர்கள், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ரா கிராம், பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டால், 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் சைபர் கிரைம் போலீசை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.