ADDED : ஜூலை 18, 2024 05:20 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்வி துறை வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை இயக்குனர் அமன் சர்மா, தொழில் நுட்ப பல்கலைக்கழகம் துணை வேந்தர், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், உயர்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.