ADDED : ஜூலை 18, 2024 05:30 AM

அரியாங்குப்பம், : அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி மூலம் நடக்கும் நுாறு நாள் வேலை திட்டம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, அரியாங்குப்பம், அருந்ததிபுரம் பகுதியில், வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இந்த பணி, அரியாங்குப்பம் பழைய சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் மண் அடைத்து, புதர்கள் மண்டி கிடந்தது.
இதனால், கழிவுநீர், மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்றன. அதையடுத்து, நுாறு நாட்கள் வேலை செய்யும் ஊழியர்கள் அந்த இடங்களில் இருந்த, மண் மற்றும் புதர்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுப்பட்டனர்.