/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சங்கராபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு சங்கராபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு
சங்கராபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு
சங்கராபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு
சங்கராபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 18, 2024 04:54 AM

வில்லியனுார் : வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில் சுழிவுநீர் கலந்து மாசுபடுவதை கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வுசெய்தனர்.
வில்லியனுார் அடுத்த உறுவையாறு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கரன், சங்கராபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து ஆகாய தாமரை செடிகள் வளர்ந்துள்ளதாகவும், திருக்காஞ்சி கங்கா ஆரத்தி மற்றும் புனித நீராடுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு புகார் மனு அளித்தார்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் வில்லியனுார் தெற்கு பகுதி சப் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கொட்டாரு, வருவாய் அதிகாரி புவனேஸ்வரி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியன், நீர் பாசன கோட்டை பிரிவு பொறியாளர்கள், சுற்றுச்சூழல் துறை அதிகாரி ரமேஷ், தாசில்தார் சேகர், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் பாஸ்கரன், அருள்ஜோதி உள்ளிட்டோரும் நேற்று காலை உறுவையாறு சங்கராபரணி ஆற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆற்றங்கரை பகுதியில் உள்ள கம்பெனிகளுக்கும் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சென்று கம்பெனி கழிவுநீர் ஆற்றில் விடுகின்றனரா என ஆய்வு செய்தனர்.
பின்னர் வில்லியனுார் நகர பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் அனைத்தும் உறுவையாறு மேம்பாலம் பகுதியில் ஆற்றில் கலந்து மாசுபடுவதை உடனடியாக தடுக்கவும், ஆற்றில் படந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பதாக புகார்தாரர் மற்றும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.