/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 21, 2024 05:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி நலவழித்துறை தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மற்றும் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு எதிர்ப்பு மாதத்தையொட்டி, விழிப்புணர்வு மற்றும் உலர் தின நிகழ்ச்சி, தியாகி முத்துக்குமாரசாமி அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளியில் நடந்தது.
ஆசிரியர் லுார்து சேவியர் வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார்.
தலைமையாசிரியர் செல்வம் மற்றும் சுகாதார ஆய்வாளர் மதிவதனன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் பங்கேற்றார்.
நிறைவாக சுகாதார ஆய்வாளர் மதிவதனன் உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், டெங்கு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் இளஞ்சங்கரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், விமல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.