/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள ஆரியப்பாளையம் புதிய மேம்பாலம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள ஆரியப்பாளையம் புதிய மேம்பாலம்
திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள ஆரியப்பாளையம் புதிய மேம்பாலம்
திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள ஆரியப்பாளையம் புதிய மேம்பாலம்
திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள ஆரியப்பாளையம் புதிய மேம்பாலம்
ADDED : ஜூலை 21, 2024 05:44 AM

வில்லியனுார்: ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது.
புதுச்சேரி- விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமாக ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் துவங்கிய புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
வடமங்கலம் மற்றும் ஆரியப்பாளையம் பகுதியில் புதிய மேம்பாலத்திற்கான இணைப்பு சாலைகள் சரிசெய்யப்பட்டு தார் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தில் 17 துாண்கள் அமைத்து, அதன் மீது பீம்கள் மூலம் சாலை வசதி ஏற்படுத்தி உள்ளனர்.
மேம்பாலத்தில் இருபகுதியிலும் நடைபாதை வசதிகள் ஏற்படுத்தி, கை பிடிகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது.
ஒரு சில தினங்களில் இணைப்பு சாலையில் தார் போடப்பட்டு உடன் சோதனை ஓட்டமாக வாகனங்கள் இயக்க உள்ளனர்.