/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நான்கு பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு நான்கு பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
நான்கு பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
நான்கு பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
நான்கு பேரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
ADDED : ஜூன் 06, 2024 02:28 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் வேறு ஒருவரின் வங்கி கணக்கில் 29 ஆயிரம் பணத்தை தவறுதலாக அனுப்பினார். அந்த பணம் இதுவரை திரும்ப வரவில்லை. அதே போல, சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் அஸ்ரப் என்பவர் லோன் ஆப் மூலம் பணம் வாங்கி கடனை அடைத்துள்ளார்.
இவருக்கு மர்ம நபர் ஒருவர் வாங்கிய கடனில் கூடுதலாக பணம் கட்ட வேண்டும் இல்லை எனில், மார்பிங் செய்த புகைப்படத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார். அதற்கு பயந்து, அவர் 16 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாந்தார்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மொபைல் போன் தொலைந்து விட்டது.
அந்த மொபைலில் இருந்து யு.பி.ஐ. மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த பரத் என்பவர் ஆன்லைன் மூலம் ஆயிரத்து 300 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதுகுறித்து, புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.