/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் நிலையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போலீஸ் நிலையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
போலீஸ் நிலையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
போலீஸ் நிலையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
போலீஸ் நிலையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 06, 2024 02:29 AM

அரியாங்குப்பம்: சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதையொட்டி, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து, போலீஸ் நிலையம் நுழைவு வாயில், வளாகத்தை சுற்றி, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் முன்னிலையில், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் மரக்கன்றுகள் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.