/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற ஓட்டு விபரம் வெளியிடாததால் குழப்பம் வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற ஓட்டு விபரம் வெளியிடாததால் குழப்பம்
வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற ஓட்டு விபரம் வெளியிடாததால் குழப்பம்
வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற ஓட்டு விபரம் வெளியிடாததால் குழப்பம்
வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற ஓட்டு விபரம் வெளியிடாததால் குழப்பம்
ADDED : ஜூன் 06, 2024 02:28 AM
புதுச்சேரி: ஓட்டு எண்ணிக்கை முடிந்து 24 மணி நேரம் கடந்தும், வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற ஓட்டு விபரங்களை தேர்தல் துறை வெளியிடாததால் குழப்பம் நீடித்து வருகிறது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு துவங்கி இரவு 7:30 மணிக்கு முடிந்தும், சரிபார்ப்பு பணியால் இரவு 10:00 மணியை தாண்டியும் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரங்கள், ஓட்டு எண்ணிக்கை முடிந்து 24 மணி நேரம் கடந்தும், தேர்தல் துறை வெளியிடவில்லை.
ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்திலும், வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் மற்றும் உதவி நடத்தும் தேர்தல் அதிகாரிகள் வாய்மொழியாக அளித்த தகவல்களே நேற்று வரை கிடைத்தது. இதனால், ஒவ்வொரு தொகுதியிலும், கட்சி வேட்பாளர்கள் சுயேட்சைகள் பெற்ற ஓட்டு விபரங்களில் முரண்பாடுகள் நிலவி வருகிறது.
தமிழகத்தில் ஓட்டு எண்ணும் பணியில், ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையின்போது, வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரங்கள் உடனுக்கு உடன் பிரிண்ட் வடிவில் வெளியிடப்பட்டது.
புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலுார், விழுப்புரத்தில் கூட ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம் துள்ளியமாக பிரிண்ட் வடிவில் பத்திரிக்கைகளுக்கு வழங்கப்பட்டது.
பி.ஆர்.ஓ., ஏ.பி.ஆர்.ஓ.க்கள் இந்த பணிகளை செவ்வனே செய்து முடித்தனர்.
ஆனால், புதுச்சேரியிலோ இதுபோன்ற எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.