/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மியாட் மருத்துவமனை மருத்துவர் புதுச்சேரி, கடலுாரில் ஆலோசனை மியாட் மருத்துவமனை மருத்துவர் புதுச்சேரி, கடலுாரில் ஆலோசனை
மியாட் மருத்துவமனை மருத்துவர் புதுச்சேரி, கடலுாரில் ஆலோசனை
மியாட் மருத்துவமனை மருத்துவர் புதுச்சேரி, கடலுாரில் ஆலோசனை
மியாட் மருத்துவமனை மருத்துவர் புதுச்சேரி, கடலுாரில் ஆலோசனை
ADDED : ஜூலை 07, 2024 03:34 AM

புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துவமனை இருதயவியல் சிறப்பு மருத்துவர், இருதய நோய் தொடர்பாக, கடலுார், புதுச்சேரியில் ஆலோசனை வழங்கினார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து இருதயவியல் சிறப்பு மருத்துவர் மணிகண்டன், கடலுார் ஆர்காட் மருத்துவமனையில் இருதய நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு நேற்று காலை ஆலோசனை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, புதுச்சேரி, தி பாஷ் மருத்துவமனையில், மாலை 4:00 முதல் 7:00 வரை பொதுமக்களுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
முகாமில், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட இருதய அறுவை சிகிச்சை, திறந்த நிலை இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், ஆஞ்ஜியோகிராம் உள்ளிட்ட இருதய நோய் அறுவை சிகிச்சைகள் தொடர்பாகவும், இருதய நோய் அறிகுறிகளான நெஞ்சுவலி, வியர்த்தல், சோர்வு, மூச்சுத் திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.