/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறால் கொள்முதல் செய்து ரூ.1 கோடி ஏமாற்றியவர் கைது இறால் கொள்முதல் செய்து ரூ.1 கோடி ஏமாற்றியவர் கைது
இறால் கொள்முதல் செய்து ரூ.1 கோடி ஏமாற்றியவர் கைது
இறால் கொள்முதல் செய்து ரூ.1 கோடி ஏமாற்றியவர் கைது
இறால் கொள்முதல் செய்து ரூ.1 கோடி ஏமாற்றியவர் கைது
ADDED : ஜூலை 07, 2024 03:33 AM
மயிலாடுதுறை: இறால் கொள்முதல் செய்து ரூ.1 கோடி பணம் கொடுக்காமல் தலைமறைவான கடல் உணவு ஏற்றுமதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருநகரியை சேர்ந்தவர் ராமன். இறால் மொத்த விற்பனை செய்து வந்தார். இவரை தொடர்பு கொண்ட, திருச்சி கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஜெயச்சந்திரன், சுதாகர் ஆகியோர், 'தினசரி 6 ஆயிரம் கிலோ இறால் வேண்டும்.
3 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று கூறினர். அதன்படி, ராமனிடம் இறால் கொள்முதல் செய்து பணம் கொடுத்து வந்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு ராமனிடம் வாங்கிய 180 டன் இறாலுக்கு ரூ.5 கோடியே 35 லட்சம் பணம் கொடுப்பதற்கு 4 கோடியே 25 லட்சம் மட்டும் கொடுத்தனர்.
மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால் ராமன் மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.
குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, திருச்சியில் கடல் உணவு பொருள் ஏற்றுமதி நிறுவனம் நடத்திய மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்,60, அவரது பங்குதாரர் திருச்சியை சேர்ந்த சுதாகர் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்த ஜெயச்சந்திரனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து நேற்று மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
இவ்வழக்கில் தொடர்புடைய சுதாகர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில், 'இறால் ஏற்றுமதி தொழில் செய்தபோது பங்குதாரர் சுதாகர் 3 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்று விட்டார். அதனால் கொள்முதல் செய்த இறாலுக்காக ராமனுக்கு பணம் கொடுக்க முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தேன். இந்நிலையில் போலீசார் என்னை தேடி வந்ததால் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். பிணைத்தொகை கட்ட முடியாததால் ஜாமின் ரத்தாகி விட்டது' என ஜெயச்சந்திரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.