/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராயக் கடைகளை மூடி விட்டு ரெஸ்ட்டோ பார்களை முறைப்படுத்த காங்., கோரிக்கை சாராயக் கடைகளை மூடி விட்டு ரெஸ்ட்டோ பார்களை முறைப்படுத்த காங்., கோரிக்கை
சாராயக் கடைகளை மூடி விட்டு ரெஸ்ட்டோ பார்களை முறைப்படுத்த காங்., கோரிக்கை
சாராயக் கடைகளை மூடி விட்டு ரெஸ்ட்டோ பார்களை முறைப்படுத்த காங்., கோரிக்கை
சாராயக் கடைகளை மூடி விட்டு ரெஸ்ட்டோ பார்களை முறைப்படுத்த காங்., கோரிக்கை
ADDED : ஜூலை 05, 2024 06:36 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் சாராயக்கடைகள் மூட வேண்டும். ரெஸ்ட்டோ பார்களை முறைப்படுத்த வேண்டும் என, காங்., வலியுறுத்தியுள்ளது.
காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சார்பில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமையில், காங்., ஒருங்கிணைப்பாளரும், காமராஜர் தொகுதி பொறுப்பாளருமான தேவதாஸ், துணைத் தலைவர் அனந்தராமன், வட்டார காங்., தலைவர் ஆறுமுகம், எம்.பி.,யின் நேர்முக உதவியாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நேற்றுமனு அளித்தனர்.
மனுவில், ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு சாப்பிடுவதற்கான வெள்ளை அரசியை தரமானதாக வழங்க வேண்டும்.ரேஷன் கடையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை மானிய விலையில், வழங்க வேண்டும். மின்துறையை தனியார் மயமாக்கும், மத்திய அரசின் முயற்சியை, புதுச்சேரி அரசு தடுக்க வேண்டும்.
மின்துறையில் அமல்படுத்த உள்ள, பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை அனுமதிக்க கூடாது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லை எனில், மின் கட்டண உயர்வை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், மானியமாக வழங்கி, அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர், சட்டசபையில் பேசும் போது, கள்ளச்சாராயத்திற்கான மூலப்பொருள், புதுச்சேரி பகுதியில் இருந்து, வந்ததாக குறிப்பிட்டார்.இத்தகைய சூழலில், புதுச்சேரி மாநிலத்தில் முழுதுமாக, சாராயக்கடைகளை மூட வேண்டும்.
மதுக்கடைகளின் வியாபார நேரம் குறைக்க வேண்டும். ஒருநாளில், 8 முதல் 10 மணி நேரத்திற்கு மேல், மதுபானங்கள் விற்க தடை விதிக்க வேண்டும். ரெஸ்ட்டோ பார்கள் அனைத்தையும், முறைப்படுத்தி, இளைய சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.
வருங்காலத்தில், தேவையில்லாமல் ரெஸ்ட்டோ பார்கள் திறக்கக்கூடாது. குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள ரெஸ்ட்டோ பார்களை அகற்ற வேண்டும்.
புதுச்சேரிக்கு நீட் தேர்வை, ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில், தீர்மானம் இயற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.முதல்வர், பிரதமருக்கு கடிதம் வாயிலாகவும், நீட் தேர்வில் இருந்து, விலக்கு அளிக்கக வலியுறுத்த வேண்டும்.முதல்வர் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, தீர்மானம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.