/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'குறைந்த வட்டிக்கு பணம் நம்பி ஏமாற வேண்டாம்': சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை 'குறைந்த வட்டிக்கு பணம் நம்பி ஏமாற வேண்டாம்': சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
'குறைந்த வட்டிக்கு பணம் நம்பி ஏமாற வேண்டாம்': சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
'குறைந்த வட்டிக்கு பணம் நம்பி ஏமாற வேண்டாம்': சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
'குறைந்த வட்டிக்கு பணம் நம்பி ஏமாற வேண்டாம்': சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஜூலை 05, 2024 06:35 AM
புதுச்சேரி : குறைந்த வட்டியில் கடன் தருவதாக வரும் குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில், மர்ம கும்பல் தொடர்ந்து பல்வேறு வகைகளில் மக்களை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செயலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் மர்மநபர்கள் பொது மக்களின் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, தனி நபர் மற்றும் வணிக கடனுக்கு 1 சதவீத வட்டியில் பணம் தருவாக கூறி வருகின்றனர். அதை நம்பி, பலர் ஏமாந்து வருகின்றனர்.
அது போல பேசும் மர்ம நபர்களிடம், தங்களின் எந்த ஆவணங்களையும் அனுப்ப வேண்டாம். அப்படி அனுப்பினால், அதை வைத்து, இணைவழி மூலமாக மோசடி செய்ய வாய்ப்பு இருக்கிறது.
மேலும், மொபைல் போனுக்கு வரும் குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.