ADDED : ஜூலை 05, 2024 06:36 AM

புதுச்சேரி : வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் இல்லத் திருமண விழா புதுச்சேரி ஆனந்தா திருமண நிலையத்தில் நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, மணமக்கள் சூர்யராம் - மானசி ஆகியோரை வாழ்த்தினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனி ஜெயக்குமார், முன்னாள் சபாநாயகர் சபாபதி,முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள்., புதுச்சேரி மாநில பா.ம.க., அமைப்பாளர் கணபதி, திண்டுக்கல் மாவட்ட பா.ம.க., செயலாளர் சிவகுமார், நீதிபதி சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட நீதிபதிகள் துளசி மோகன் தாஸ், அருள், அசோகன்,அரசு வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கறிஞர் சேஷாசலம், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவபிரகாசம், அரசு அதிகாரிகள்,உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை டாக்டர் ராமானுஜம், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குமரன்,வருவாய் ஆய்வாளர் ஓய்வு சீனு மாறன், கோபால், கலைவாணன், சீனிவாசன், குமரேசன் ஆகியோர் வரவேற்றனர்.