
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே கார் உதிரிபாகங்கள் கடை வாசலில் கார்களை நிறுத்துவதால், பாலத்தில் இருந்து வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது.
பாலமோகன், அரியாங்குப்பம்.
சரக்கு லாரிகளால் சிக்கல்
ரங்கப்பிள்ளை வீதி, நீடராஜப்பர் வீதியில் பகல் நேரத்தில் சரக்கு லாரிகள் செல்வதால், மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
பச்சையப்பன், புதுச்சேரி.
கழிவு நீர் தேக்கம்
கிருஷ்ணா நகர், காமராஜர் வீதியில் டெய்லர் கடை பின்புறம் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லைஅதிகரித்துள்ளது.
ராஜசேகர், கிருஷ்ணா நகர்,
போக்குவரத்து விதிகள் மீறல்
புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு செல்லும் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக இயக்கப்படுகிறது.
தருண், புதுச்சேரி.