/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கவர்னர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கவர்னர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கவர்னர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கவர்னர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கவர்னர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து
ADDED : ஜூன் 05, 2024 11:22 PM
புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கவர்னர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன்.5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.நாம் நம்முடைய சுற்றுச்சூழலைப் புரிந்து கொள்ள வேண்டியதையும் அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் உணர்த்துகிறது.
சுற்றுச்சூழலுக்கு எதிரான நம்முடைய செயல்பாடுகள் இயற்கையை பாதித்து மனித வாழ்க்கை முறையையும் பெரிதும் பாதிக்கிறது என்ற புரிதல் உணர்வை நாம் பெற வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடுவோம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், இயற்கையைப் போற்றுவோம். சுற்றுச்சூழலை பாதுகாத்து வரும் தலைமுறையினருக்கு இந்த பூமியை பாதுகாப்பாக கையளிப்போம் என்று இந்த நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.