/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமைச்சர் நமச்சிவாயம் நன்றி தெரிவிப்பு அமைச்சர் நமச்சிவாயம் நன்றி தெரிவிப்பு
அமைச்சர் நமச்சிவாயம் நன்றி தெரிவிப்பு
அமைச்சர் நமச்சிவாயம் நன்றி தெரிவிப்பு
அமைச்சர் நமச்சிவாயம் நன்றி தெரிவிப்பு
ADDED : ஜூன் 05, 2024 11:21 PM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மீதும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்து ஓட்டு அளித்த புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது மக்கள் பணியிலும், மாநில வளர்ச்சியிலும் உங்களின் பேராதரவுடன் தொடர்ந்து பணியாற்றி மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்பதனை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்காக தேர்தல் பணியாற்றிய முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.