/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனுமதித்த நேரம் கடந்தும் மது விற்பதாக புகார் அனுமதித்த நேரம் கடந்தும் மது விற்பதாக புகார்
அனுமதித்த நேரம் கடந்தும் மது விற்பதாக புகார்
அனுமதித்த நேரம் கடந்தும் மது விற்பதாக புகார்
அனுமதித்த நேரம் கடந்தும் மது விற்பதாக புகார்
ADDED : ஜூலை 13, 2024 12:30 AM
பாகூர்: புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள ரெஸ்டோ பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரி அரசின் வருவாயை பெருக்குவதற்காக புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு கலால் துறை அனுமதி வழங்கியது. இதன் மூலம், ரெஸ்டாரண்ட்டுகள் பலவும் ரெஸ்டோ பார்களாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த ரெஸ்டோ பார்களில் வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.ரெஸ்டோ பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும், அதாவது நள்ளிரவு 12:00 மணியை கடந்தும், மது விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வார இறுதி நாட்களில் விடிய விடிய கூட மது விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, புதுச்சேரி எல்லை பகுதியான கிருமாம்பாக்கம், முள்ளோடை, காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ரெஸ்டோ பார்களில் அரசு அனுமதி அளித்த நேரத்தை கடந்தும் மது விற்பனை நடைபெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரவு எந்த நேரம் சென்றாலும் மது கிடைக்கும் என்பதால், மது பிரியர்கள் எல்லையில் உலா வருவதால், பல்வேறு குற்றச் சம்பவங்களும் அரங்கேறும் வாய்ப்புகள் உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.