/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'ஜஸ்ட் டயல்' மொபைல் ஆப் மூலம் மோசடி சென்னை ஆசாமி அதிரடி கைது 'ஜஸ்ட் டயல்' மொபைல் ஆப் மூலம் மோசடி சென்னை ஆசாமி அதிரடி கைது
'ஜஸ்ட் டயல்' மொபைல் ஆப் மூலம் மோசடி சென்னை ஆசாமி அதிரடி கைது
'ஜஸ்ட் டயல்' மொபைல் ஆப் மூலம் மோசடி சென்னை ஆசாமி அதிரடி கைது
'ஜஸ்ட் டயல்' மொபைல் ஆப் மூலம் மோசடி சென்னை ஆசாமி அதிரடி கைது
ADDED : ஜூலை 07, 2024 03:38 AM

புதுச்சேரி: 'ஜஸ்ட் டயல்' மொபைல் ஆப் மூலம், பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட சென்னை ஆசாமியை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அருகே பாகூரை சேர்ந்தவர் அஸ்வின். இவர், கோவில் திருவிழாவிற்காக தவில் மற்றும் நாதஸ்வர கச்சேரிக்காக, இணையதளத்தில் உள்ள ஜஸ்ட் டயல் மொபைல் ஆப் மூலம் தேடினார். அப்போது, ஒருவர் தன்னிடம் தவில், நாதஸ்வரம் இருப்பதாக தெரிவித்தார்.
கோவில் திருவிழாவுக்கு நாதஸ்வரம், தவில் வாசிக்க முன்பணமாக ரூ. 22 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறினார். அஸ்வின் பணம் செலுத்திவிட்டார். ஆனால், மர்ம நபர் கூறியபடி கோவில் திருவிழாவுக்கு நாதஸ்வரம், தவில் வரவில்லை. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, சென்னை கொரட்டூரை சேர்ந்த ஜெயக்குமார், 52; என்பவர், நாதஸ்வரம், தவில் அனுப்பி வைப்பதாக கூறி பணம் ஏமாற்றியது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான போலீசார் சென்னை சென்று ஜெயக்குமாரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.
ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் சென்ட்ரிங் சீட், 2 தனியார் பள்ளிகளுக்கு மொபைல் கழிவறை, எல்.இ.டி., டி.வி., வாடகைக்கு தருகிறேன். செண்டை மேளம் அனுப்புகிறேன் என, 7 பேரிடம், பணம் மோசடி செய்தது தெரியவந்தது.
கைதான ஜெயக்குமார், தமிழகம் புதுச்சேரியில் ஜஸ்ட் டயல் மொபைல் ஆப் மூலம் பல்வேறு தொழில்கள் செய்வதாக பதிவு செய்து, பொதுமக்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு அந்த பொருட்களை வாடகைக்கு அனுப்பாமல் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.
ஜெயக்குமாரிடம் இருந்து 30 வங்கி கணக்கு புத்தகம், 20 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.