/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி
ADDED : ஜூலை 07, 2024 03:38 AM
விக்கிரவாண்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு, முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என, பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி வடக்குச்சிபாளையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் சமீப காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கடந்த மாதம் நெல்லையில் காங்., மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 நாட்களுக்கு முன்பு சேலத்தில் அ.தி.மு.க., நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்தனர்.
தமிழ்நாடு தொடர்ந்து சாவுகளையும், கொலைகளையும் பார்த்து கொண்டிருக்கிறது. உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என புரியவில்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இதை உளவுத்துறையின் தோல்வியாகவே நான் பார்க்கிறேன். காவல் துறையை முதல்வர் வைத்துள்ளார். எனவே, கொலைக்கு காரணம் போலீசாரும், முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும்.
விக்கிரவாண்டி தேர்தலில் பணத்தை மட்டுமே நம்பியுள்ளனர். நாங்கள் மக்கள் பலத்தை நம்பி உள்ளோம். தேர்தலின்போது வரும் அமைச்சர்கள், நந்தன் கால்வாய் திட்டத்தை பேசுவதோடு சரி. அதற்காக ரூ. 300 கோடியை ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்துவது முன்வருதில்லை.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
பா.ம.க., சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம். எல் .ஏ., மாவட்ட அமைப்பாளர் பழனிவேல், மாவட்ட தலைவர் புகழேந்தி, கோலியனூர் ஒன்றிய செயலாளர் ஞானவேல், முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.