/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் புதுச்சேரி பா.ஜ., வரவேற்பு சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் புதுச்சேரி பா.ஜ., வரவேற்பு
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் புதுச்சேரி பா.ஜ., வரவேற்பு
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் புதுச்சேரி பா.ஜ., வரவேற்பு
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் புதுச்சேரி பா.ஜ., வரவேற்பு
ADDED : ஜூன் 12, 2024 02:18 AM
புதுச்சேரி : 'கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் வரவேற்க வேண்டும் என, புதுச்சேரி மாநில பா.ஜ., கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:
கோடை விடுமுறைக்கு பின், புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அனைத்து பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை, மாநில அரசால் அமல்படுத்தியுள்ளது மாணவர்களுக்கு தனி சிறப்பு.
இதன் மூலம் நடப்புக் கல்வி ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும். சிறந்த பள்ளிச்சூழல் கற்கும் திறனையும் அறிவாற்றலையும் மேம்படுத்தும் வகையில் அமைய பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வரும் மாணவ செல்வங்களை கனிவுடன் வரவேற்று அரவணைத்து பாடங்களை கற்பிக்க வேண்டும்' என்றார்.