/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ டிரைவரிடம் நள்ளிரவில் 'ஏர் கன்' காட்டி மிரட்டிய 2 பேர் கைது ஆட்டோ டிரைவரிடம் நள்ளிரவில் 'ஏர் கன்' காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ஆட்டோ டிரைவரிடம் நள்ளிரவில் 'ஏர் கன்' காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ஆட்டோ டிரைவரிடம் நள்ளிரவில் 'ஏர் கன்' காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ஆட்டோ டிரைவரிடம் நள்ளிரவில் 'ஏர் கன்' காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ADDED : ஜூன் 12, 2024 02:18 AM
புதுச்சேரி, : புதுச்சேரி ஆட்டோ டிரைவரை நள்ளிரவில் 'ஏர் கன்' காட்டி மிரட்டி, மதுபானம் வாங்கிய, சென்னை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரியாங்குப்பம், சண்முகா நகரை சேர்ந்தவர் அய்யனார், 48. இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம், நள்ளிரவு 2:00 மணிக்கு, ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே, ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அந்த வழியே காரில் வந்து இறங்கிய, 2 பேர் அய்யனாரிடம், மதுபானம் வாங்கி தரும்படி கேட்டனர்.
அவர் நள்ளிரவு என்பதால், எங்கும் மதுபானம் கிடைக்காது என, தெரிவித்தார். இருவரில் ஒருவர், 'காரில் இருந்து ஒரு 'ஏர் கன்'னை, எடுத்து நாங்கள் யார் தெரியுமா..' என கேட்டார்.
'எங்களுக்கு இப்போது மதுபானம் வாங்கித் தராவிட்டால், சுட்டு கொலை செய்து விடுவோம்' என மிரட்டினார். அது ஒரிஜினில் துப்பாக்கி என நினைத்து, பயந்து போன அய்யனார், அவர்களுக்கு மதுபானம் வாங்கித்தர சம்மதித்தார்.
இதையடுத்து அய்யனாரின் ஆட்டோவில் ஒருவர் ஏறிக்கொள்ள, மற்றொருவர் காரில் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்தார். அப்போது ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு ஓட்டலில், அவர்களுக்கு அய்யனார் மதுபானம் வாங்கி கொடுத்தார். அதற்குரிய பணத்தை அவர்கள், 'ஜிபே' மூலம் செலுத்தி உள்ளனர்.
இதற்கு பிறகு மதுபானத்துடன் இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர். இது குறித்து அய்யனார் பெரியகடை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் இருவரும் தாம்பரத்தை சேர்ந்த ரிஷிகுமார், 28; ஸ்ரீநாத், 22, என தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கார் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'அவர்கள் வைத்திருந்தது ஒரிஜினல் துப்பாக்கி கிடையாது. அது வெறும் 'ஏர் கன்' தான். இது போன்ற 'ஏர் கன்'கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு லைசென்ஸ் தேவையில்லை. இதில் சுட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. காயம் மட்டுமே ஏற்படும்' என்றனர்.