/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தரமற்ற மருந்து சப்ளை செய்த விவகாரம் சுகாதாரத்துறையில் சி.பி.ஐ., விசாரணை தரமற்ற மருந்து சப்ளை செய்த விவகாரம் சுகாதாரத்துறையில் சி.பி.ஐ., விசாரணை
தரமற்ற மருந்து சப்ளை செய்த விவகாரம் சுகாதாரத்துறையில் சி.பி.ஐ., விசாரணை
தரமற்ற மருந்து சப்ளை செய்த விவகாரம் சுகாதாரத்துறையில் சி.பி.ஐ., விசாரணை
தரமற்ற மருந்து சப்ளை செய்த விவகாரம் சுகாதாரத்துறையில் சி.பி.ஐ., விசாரணை
ADDED : ஜூலை 25, 2024 05:20 AM
புதுச்சேரி: கர்ப்பிணி, குழந்தைகளுக்கு தரமற்ற மருந்து சப்ளை செய்து ரூ. 44 லட்சம் மோசடி குறித்து சுகாதாரத்துறையில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2019ம் ஆண்டு கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கிய சத்து மற்றும் விட்டமின் 'ஏ' மருந்துகள் சாப்பிட்ட பலருக்கு வாந்தி ஏற்பட்டது. அதனால், மருந்துகள் திரும்ப பெறப்பட்டு ஆய்வு செய்ததில், தரமற்ற மருந்துகள் சப்ளை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, போலியாக இரு கம்பெனிகளை உருவாக்கி தரமற்ற மருந்துகளை சப்ளை செய்த சுகாதாரத் துறையின் தேசிய சுகாதார இயக்ககத்தில் பணியாற்றிய நடராஜனை கடந்த பிப். மாதம் கைது செய்தனர்.
தரமற்ற மருந்துகள் சப்ளை செய்த ஸ்ரீராம் ஏஜென்சி சுகாதாத்துறை மாஜி உயர்அதிகாரியின் பினாமி கம்பெனி என்பது தெரிய வந்ததால், கடந்த 2018, 2019, 2020 ஆண்டுகளில் நடந்த மருந்து கொள்முதல்களை தணிக்கை செய்து அறிக்கை அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை, சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், மருந்து கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை சி.பி.ஐ.,க்கும் புகார்கள் சென்றது. அதன்பேரில் நேற்று காலை 11:30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்த 5 பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர், லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசெல்வத்துடன் சுகாதாரத்துறை இயக்குநர், என்.ஆர்.எச்.எம் மற்றும் ஊழியர்களிடம் மருந்து கொள்முதல் செய்ய வழங்கிய ஆணைகள், தரமற்ற மருந்துகளை பரிந்துரை செய்த டாக்டர்கள் கமிட்டி விபரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், மருந்து கொள்முதல் தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றிய சி.பி.ஐ., குழுவினர் மாலை 3:30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டனர்.