/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காலாப்பட்டு சிறையில் போன் பறிமுதல் காலாப்பட்டு சிறையில் போன் பறிமுதல்
காலாப்பட்டு சிறையில் போன் பறிமுதல்
காலாப்பட்டு சிறையில் போன் பறிமுதல்
காலாப்பட்டு சிறையில் போன் பறிமுதல்
ADDED : ஜூலை 24, 2024 07:10 AM
புதுச்சேரி, : காலாப்பட்டு சிறையில் போலீசார் மொபைல்போன் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று முன்தினம் சிறை வார்டர்கள் சம்பத், காளிதாஸ் ஆகியோர் ரோந்து சென்றனர். சிறை மருத்துவமனை அருகே உடைந்து நிலையில் ஒரு மொபைல்போன் வீசப்பட்டு கிடந்தது. அதனை எடுத்து வார்டர்கள் சிறை காண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். மொபைல்போனில் இருந்த ஐ.எம்.இ.ஐ., நம்பர்கள் அழிக்கப்பட்டு இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்போன் காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.